தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்


தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2020 6:50 AM IST (Updated: 16 Sept 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்.

கே.கே.நகர்,

திருச்சி விமானம் நிலையம் அருகே உள்ள செம்பட்டு கிராமத்தில் தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வந்தது. அந்த ஆலை பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த ஆலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய 55 தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே, தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய 55 தொழிலாளர்களுக்கும் உரிய பணப்பலன்களை வழங்கக்கோரி, தொழிலாளர் குடும்பத்தினர் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தினர் திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகரில் உள்ள ஆலை உரிமையாளர் வீட்டு முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் ஜெயபால், கே.கே.நகர் பகுதி செயலாளர் வேலுசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். வீட்டு முன்பு, விறகு அடுப்பில் பெரிய அண்டாவை வைத்து கஞ்சி காய்ச்சி அனைவரும் குடித்தனர். இந்த போராட்டத்தில் 40 பெண்கள், 10 ஆண்கள் பங்கேற்றனர்.

Next Story