தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாள் விழா தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் பெரியார் சிலையில் இருந்து கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக 4 ரோட்டை வந்து அங்குள்ள அண்ணா சிலைக்கு விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் குருநாதன், மோகன், பழனிசாமி, ஒன்றிய செயலாளர்கள் பெரியண்ணன், செந்தில்குமார், செந்தில், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், கூட்டுறவு ஒன்றிய இயக்குனர் மாதேஷ், கூட்டுறவு சங்க தலைவர் மாதேஷ், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் ஆறுமுகம், நிர்வாகி வடிவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.-அ.ம.மு.க.
இதேபோன்று தர்மபுரி பஸ் நிலையம் அருகில் இருந்து தி.மு.க.வினர் நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக 4 ரோட்டுக்கு சென்றனர். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் ஆ.மணி, முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், குமரவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணை செயலாளர் ஆர்.ஆர்.முருகன், மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், நகர செயலாளர் மணிவண்ணன், மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், கணேசன், கருணாகரன், பூங்காவனம், தன்ராஜ், நகர பேரவை செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரியூர்
ஏரியூரில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் தங்கராஜ், தனபால் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரியூரில் ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் ஊராட்சி செயலாளர் பெருமாள், கிளை செயலாளர்கள் குமார், பரந்தாமன், மாவட்ட பிரதிநிதிகள் தனபாலன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொம்மிடி
பாப்பிரெட்டிப்பட்டியில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு கட்சியின் துணை பொதுச் செயலாளர் பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன், ஒன்றிய செயலாளர் கவுதமன், நகர செயலாளர் சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ம.தி.மு.க.-திராவிடர் கழகம்
தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் வீரமணி, மாவட்ட அவைத்தலைவர் சாமிகண்ணு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆசைபாஷா, தீர்மானக்குழு உறுப்பினர் வஜ்ஜிரவேல், மாவட்ட துணை செயலாளர்கள் வைஜெயந்தி, முத்தியாலு, புத்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாசம், சிவபாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நகர தலைவர் கருபாலன் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நகர செயலாளர் பரமசிவம், மாவட்ட தலைவர் சிவராஜ், அமைப்பாளர் கோவிந்தராஜ், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் தன்ராஜ், காமராஜ், ஏங்கல்ஸ், கதிர், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story