திருபுவனை நூற்பாலை ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்


திருபுவனை நூற்பாலை ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2020 10:26 PM GMT (Updated: 12 Oct 2020 10:26 PM GMT)

திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை சங்க ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை,

திருபுவனையில் உள்ள கூட்டுறவு நூற்பாலை சங்க ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் திருபுவனை தொகுதி பொறுப்பாளர்கள் சங்கர், சுந்தரமூர்த்தி, அய்யனார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஐ.என்.டி.யு.சி. சங்க பொறுப்பாளர்கள் எல்லப்பன், மஞ்சினி, ராஜேந்திரன், சிவசங்கரன் மற்றும் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 5 மாத லே-ஆப் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2 வருட போனஸ், 5 மாத நிலுவை சம்பளம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Next Story