சி.ஐ.டி.யு.வினர் காத்திருப்பு போராட்டம்


சி.ஐ.டி.யு.வினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2020 4:42 PM GMT (Updated: 13 Oct 2020 4:42 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் கோரம்பள்ளம் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. சார்பில் கோரம்பள்ளம் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ரசல் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாத அரசு அறிவித்து உள்ள கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு புதுப்பித்தல், பணப்பயன் பெறுவதற்கான ஆன்லைன் முறையை எளிமைப்படுத்த வேண்டும், நேரடி பதிவு முறையையும் தொடர வேண்டும், நலவாரிய ஓய்வூதியர்களுக்கு ஒரு ஆண்டாக வழங்கப்படாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநகர செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
  • chat