மாவட்ட செய்திகள்

குளத்தூரில் வட்டார மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு + "||" + Petition to the Collector's Office to set up a local women's self-help group building in Kulathur

குளத்தூரில் வட்டார மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

குளத்தூரில் வட்டார மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் அமைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
குளத்தூரில் வட்டார மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடந்து வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.


ஆனாலும் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு கொடுத்து வருகின்றனர். வளரும் தமிழகம் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் காந்தி மள்ளர் தலைமையில் குளத்தூர் வட்டார மகளிர் சுய உதவிக்குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘குளத்தூர் பஞ்சாயத்து பகுதியில் வட்டார அளவிலான மகளிர் சுய உதவிக்குழு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு சுமார் 100 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த நிலையில் அனைத்து வசதிகளும் உள்ள குளத்தூரில் கட்டிடம் கட்டுவதற்கு பதிலாக, பனையூர் கிராமத்துக்கு மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் மாற்றப்பட்டு உள்ளது.

ஆகையால் பனையூரில் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். குளத்தூரில் கிராமசபை கூட்டத்தை கூட்டி இடத்தை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி குளத்தூர் மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறி உள்ளனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அடைத்து வைக்கப்பட்டு இருந்த இடத்தில், ‘தற்போது கயத்தாறு தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. ஆகையால் அந்த தாலுகா அலுவலகத்துக்கு மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
திருப்பூரில் சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
2. கிராம உதவியாளர் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நிரப்பக்கோரி மனு
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க அரவக்குறிச்சி வட்ட கிளை மற்றும், புகளூர் வட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.
3. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.
4. வாக்காளர் பட்டியல் திருத்த முகாமின் போது படிவங்கள் முறையாக வழங்க வேண்டும் கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள வாக்காளர் சுருக்க திருத்த முகாமின் போது 3 வகை படிவங்களையும் முறையாக வழங்க கோரி கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி. மனு கொடுத்தனர்.
5. ஏமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட கணவரை மீட்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மனு
ஏமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட கணவரை மீட்க வேண்டும் என்று, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் கோரிக்கை மனு கொடுத்தார்.