மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறக்கப்பட்டதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முற்றுகை + "||" + The siege of the Department of Education office condemned the reopening of schools

பள்ளிகள் திறக்கப்பட்டதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முற்றுகை

பள்ளிகள் திறக்கப்பட்டதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழுவினர் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காரைக்கால்,

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழுவினர் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராளிகள் குழு நிர்வாகிகள் ரகீம், பிலால், அன்சாரி, பாரூக், இஸ்மாயில், வெங்கடேஷ், ஜான்சன், பிரபு, பிரபாகரன், விடுதலைக்கனல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கக் கூடாது என முறையிட்டும் புதுவை அரசு பள்ளிகளை திறந்தது கண்டிக்கத்தக்கது. பள்ளி திறக்கப்பட்டதால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்ற மாணவர்களுக்கும் பரவும் முன், பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்து, பள்ளிகளை அரசு உடனே மூடவேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது கல்வித்துறை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராளிகள் குழுவிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொரோனா நேரத்தில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதால் அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுகுடல் கிராமத்தில் போலி உரம் விற்பனை: இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
சிறுகுடல் கிராமத்தில் போலி உரம் விற்பனை செய்தவர்களிடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
2. குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
பழனி-திண்டுக்கல் சாலையில் திருநகர் அருகே பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
3. அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முற்றுகை
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க கோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
4. சிறுவனை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகள் கைது போலீஸ் நிலையம் முற்றுகை
சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
5. தொழிற்சங்கத்தினர் பொதுவேலை நிறுத்தம்: மாவட்டத்தில் 12 இடங்களில் போராட்டம் 300-க்கும் மேற்பட்டோர் கைது
தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் 12 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.