மாவட்ட செய்திகள்

தாராவியில் ரூ.2.40 கோடி ஹெராயின் பறிமுதல் தையல் தொழிலாளி கைது + "||" + Tailor arrested for seizing Rs 2.40 crore heroin in Darawi

தாராவியில் ரூ.2.40 கோடி ஹெராயின் பறிமுதல் தையல் தொழிலாளி கைது

தாராவியில் ரூ.2.40 கோடி ஹெராயின் பறிமுதல் தையல் தொழிலாளி கைது
தாராவியில் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தையல் தொழிலாளியை கைது செய்தனர்.
மும்பை,

மும்பை தாராவியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான மன்னார் சேக் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் போலீசார் அவரது வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

கைது

இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ 200 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக போலீசார் மன்னார் சேக்கை கைது செய்தனர். மேலும் அவர் போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாராவியில் ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். சூதாட்டம்: 4 பேர் கைது; ரூ.4 கோடி பணம் பறிமுதல்
ராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணமும் பறிமுதல் செய்துள்ளனர்.
2. சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.44 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 842 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
4. சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
5. ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு கடத்த முயற்சி: டேங்கர் லாரியில் பதுக்கிய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு டேங்கர் லாரியில் கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை செங்குன்றம் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.