தொல்.திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


தொல்.திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2020 9:56 AM IST (Updated: 26 Oct 2020 9:56 AM IST)
t-max-icont-min-icon

தொல்.திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரியும் பா.ஜனதா மாவட்ட அரசு தொடர்பு பிரிவு சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணாமலை நகர், 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. இவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும். தொல்.திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரியும் பா.ஜனதா மாவட்ட அரசு தொடர்பு பிரிவு சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பா.ஜனதா அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் என்ஜினீயர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் குருமூர்த்தி, நகர தலைவர் நாராயணன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், ஊடகப்பிரிவு சிவக்குமார், குமராட்சி ஒன்றியம் செந்தில்குமார், கீரப்பாளையம் ஒன்றியம் மணிவண்ணன், மாவட்ட செயலாளர் அருண்குமார், உலகநாதன், பூபேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, என்ஜினீயர் ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்துக்கு சென்று, திருமாவளவன் எம்.பி. மீது புகார் மனுவை ஒன்றையும் அளித்தனர். 

Next Story