தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த நவம்பர் 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி,
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த நவம்பர் 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடை காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், மண்டகப்படி தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. சுவாமி- அம்பாள் சப்பர உலா கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. திருவிழாவின் 9-ம் நாளில் தேரோட்டம் வழக்கமாக நடைபெறும். இந்த ஆண்டு 9-ம் நாளான நேற்று தேரோட்டத்திற்கு பதிலாக கோவில் வளாகத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story