கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் அரசு ஊழியர் சம்மேளனத்தினர் தர்ணா
புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடந்தது. கலைச்செல்வன், ஆனந்தராசன், புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இளங்கோவன், ராமு, துளசி, பாக்கியவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு புதுவை அரசுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியின் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை வழங்கிட உத்தரவிட வேண்டும். புதுவை மின்துறை தனியார் மயமாக்கம், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வை உடனடியாக கைவிட வேண்டும். அரசு 7-வது ஊதியக்குழுவின் 8 மாத நிலுவைத்தொகை, 13 மாத வீட்டு வாடகை நிலுவைத் தொகை ஆகியவற்றை அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். காலியாக உள்ள அனைத்து இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story