மீண்டும் பணி வழங்கக்கோரி அரசு மருத்துவமனை வார்டு உதவியாளர்கள் போராட்டம்


மீண்டும் பணி வழங்கக்கோரி அரசு மருத்துவமனை வார்டு உதவியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2020 9:12 PM GMT (Updated: 10 Nov 2020 9:12 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தங்களுக்கு பணி வழங்கக்கோரி அரசை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினக்கூலி அடிப்படையில் 54 வார்டு உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் தங்களுக்கு பணி வழங்கக்கோரி அரசை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மீண்டும் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இதனிடையே 2 மாத சம்பளம் வழங்காத நிலையில் மருத்துவமனை உதவியாளர்கள் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்ந்து பணியாற்றி வந்தநிலையில் இந்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி வழங்க கோரி கல்லூரி வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story