திருப்பூர் மார்க்கெட்டில் 80 டன் மீன் விற்பனை
திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு நேற்று 80 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் தென்னம்பாளைம் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சந்தைக்கு உள்புறம் மற்றொரு பகுதிகளில் மீன் சந்தை உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி செல்வார்கள்.
மற்ற நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதற்கிடையே நேற்று மீன் மார்க்கெட்டிற்கு 80 டன்மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
வஞ்சிரம் ரூ.600-க்கு விற்பனை
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மார்க்கெட்டிற்கு சென்னை, தூத்துக்குடி, ஆந்திரா, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். வழக்கமாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் ஒன்றுக்கு 40 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து வளர்ப்பு மீன்கள் 40 டன்னும், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து 40 டன்களும் என மொத்தம் 80 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
மீன்கள் விற்பனையும் ஓரளவிற்கு நன்றாக இருந்தது. நேற்று ஒரு கிலோ வெளமீன் ரூ.400-க்கும், வஞ்சரம் ரூ.600-க்கும், அயிலை ரூ.150-க் கும், மொரல் ரூ.200-க் கும், வாவல் ரூ.600-க்கும், ரால் பெரிசு ரூ.550-க்கும், சிறிசு ரூ.250-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், மத்தி ரூ.120-க் கும் நண்டு (நீலம்) ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் அணை மீன்களான கட்லா ரூ.170-க்கும், ரோகு ரூ.140-க் கும், பாறை ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வெங்காயம்
தென்னம்பாளையம் சந்தையில் ஏராளமான மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் பெரிய மற்றும் சின்ன வெங்காயம் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கிடையே தற்போது தென்னம்பாளையம் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தது.
இது குறித்து வெங்காய வியாபாரி மனோகரன் கூறியதாவது:-
தென்னம்பாளையம்சந்தையை பொறுத்தவரை மராட்டியம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்து வருகிறோம். தற்போது பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகமாக வரத்து உள்ளது. இதன் காரணமாக தற்போது பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45-க்கும், சின்ன வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் எகிப்து வெங்காயத்தின் வருகையும் அதிகமாக இருந்து வருகிறது. இது ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story