நிவாரணம் வழங்க வலியுறுத்தி அருப்புக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நிவாரணம் வழங்க வலியுறுத்தி அருப்புக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 8:02 PM GMT (Updated: 2021-02-03T01:32:19+05:30)

நிவாரணம் வழங்க வலியுறுத்தி அருப்புக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை,

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட விவசாய சங்க செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.  கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும். 

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதி்ல் விவசாய சங்க தாலுகா செயலாளர் சேதுராமானுஜம், முன்னாள் மாவட்ட செயலாளர் பாபு, மேலதுலுக்கன்குளம், மல்லாங்கிணறு, கோணபனேந்தல், புல்வாய்க்கரை, சித்தலக்குண்டு, பந்தல்குடி, ஆவுடையாபுரம், பனையூர் ஆகிய கிராமங்களை விவசாயிகள் கலந்து கொண்டனர். 

பின்னர் தங்களது கோரிக்கைகளை மனுவாக தயாரித்து  கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணனிடம், விவசாயிகள் அளித்தனர்.

Next Story