கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது


கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2021 11:57 PM GMT (Updated: 3 Feb 2021 12:16 AM GMT)

கத்தியை காட்டி மிரட்டி முதியவரிடம் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 66). இவர் நேற்று முன்தினம் தில்லைநகர் பஸ்நிலையத்தில் தனது மகனுடன் நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சாந்தனு (32) தங்கராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000, மற்றும் செல்போனை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் சாந்தனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story