மோட்டார் சைக்கிள்- டிராக்டர் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள்- டிராக்டர் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 28 Feb 2021 6:02 AM GMT (Updated: 28 Feb 2021 6:02 AM GMT)

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள்-டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

உத்திரமேரூர், 

உத்திரமேரூர் அடுத்த மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் அசோக் குமார் (வயது 36), டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் உத்திரமேரூர் சென்று விட்டு, தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கட்டியாம்பந்தல் கூட்ரோடு அருகே எதிரே வந்த டிராக்டர் இவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

டிரைவர் பலி

இதில் கீழே விழுந்த அசோக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிராக்டர் டிரைவரை தேடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story