மணலி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி; டிரைவர் கைது


மணலி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி; டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 March 2021 11:20 PM GMT (Updated: 28 March 2021 11:20 PM GMT)

மணலி அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

லாரி மோதி விபத்து
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பரத்ராஜ் (வயது21). இவர் பூந்தமல்லி அருகே கோவூரில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், பரத்வாஜ் நேற்றுமுன்தினம் இரவு குன்றத்தூரைச் சேர்ந்த தனது நண்பரான வெற்றிவேல் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணலி விரைவு சாலையில் எர்ணாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது அப்பகுதியில் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியதில், பரத்வாஜ் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனால் பரத்ராஜ் அதே இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக பலியானார்.

டிரைவர் கைது
காயமடைந்த வெற்றிவேல் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இறந்து போன பரத்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதைத்தொடர்ந்து, காயமடைந்த வெற்றிவேல் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மணலி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவர் கமல் (37) என்பவரை கைது செய்து விசாரித்து 
வருகின்றனர்

Next Story