விவசாயிகள் வாழ்வாதாரம் உயர கொடைக்கானலில் காய்கறி, பழங்கள் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன்


கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பழனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்
x
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பழனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்
தினத்தந்தி 30 March 2021 10:38 AM GMT (Updated: 30 March 2021 10:38 AM GMT)

விவசாயிகள் வாழ்வாதாரம் உயர கொடைக்கானலில் காய்கறி, பழங்கள் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் பேச்சு

கொடைக்கானல்,
பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் நேற்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, மாட்டுப்பட்டி, கோம்பை, அளத்துறை, அண்ணா ராமசாமிநகர், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம்  செய்தார். முன்னதாக தி.மு.க.வை சேர்ந்த வில்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவருமான ஆர்.பி கிருஷ்ணன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து அங்கு ரவி மனோகரன் பேசியதாவது:-

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் வெள்ளைப்பூண்டு, கேரட், உருளை, பீன்ஸ் மற்றும் பழங்கள் அதிக அளவில் விளைகிறது. இவை அதிகமாக விளையும்போது போதிய விலை கிடைப்பதில்லை.  எனவே கொடைக்கானல் பகுதியில் அரசு சார்பில் காய்கறி, பழங்கள் கொள்முதல் நிலையம், பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவசமாக நிலத்துடன் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளங்கி, கோம்பை வழியே கொடைக்கானல்- பழனி இடையே புதிய சாலை அமைக்கப்படும். குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில் நடிகர் அனுமோகன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ், மேல்மலை ஒன்றிய செயலாளர் வி.கே.முருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவாஜி, ஒன்றிய பொருளாளர் மாசாணம், கூட்டுறவு சங்கத்தலைவர் விக்ரம் செந்தில், வில்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் வாசு, ஒன்றிய நிர்வாகி குப்புசாமி, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கணேஷ்பிரபு, நகர நிர்வாகிகள் ஹரிஹரன், யுவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story