மாவட்ட செய்திகள்

ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு + "||" + R.K. Death of a boy who fell into a well near the hood

ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு

ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு
ஆர்.கே.பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஒன்றியம் புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். கோணி தைக்கும் தொழிலாளி. அவரது வீட்டுக்கு சென்னை புரசைவாக்கம் சூளைமேடு பகுதியை சேர்ந்த உறவினர் தேவேந்திர குமார், அவரது மனைவி பிரியா, மகன்கள் நந்தகுமார் (வயது 15), அஜித் குமார் (13) ஆகியோர் சென்றனர்.

நேற்று காலை நந்தகுமார் தனது தம்பி அஜித் குமார் மற்றும் சில சிறுவர்களுடன் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள பெருமாள் என்பவரது விவசாய கிணற்றில் குளிக்க சென்றான். குளித்து முடித்து வரும்போது நந்தகுமார் கால் தவறி மீண்டும் கிணற்றில் விழுந்தான்.

சாவு

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் உடனடியாக அங்கு இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பலத்த மழை காரணமாக மின்கசிவு: மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவி சாவு
சிட்லபாக்கத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மின்கசிவில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார்.
2. பலத்த மழை காரணமாக மின்கசிவு: மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவி சாவு
சிட்லபாக்கத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மின்கசிவில் மின்சாரம் தாக்கி 7-ம் வகுப்பு மாணவி பலியானார்.
3. உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் மண்சரிவு; 2 தொழிலாளர்கள் சாவு
உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்ககள் பரிதாபமாக இறந்தனர்.
4. சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்: கொரோனா தொற்றுக்கு அ.ம.மு.க. பிரமுகர் சாவு
சட்டமன்ற தேர்தலில் காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்: கொரோனா தொற்றுக்கு அ.ம.மு.க. பிரமுகர் சாவு.
5. மரணத்திலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு திருவொற்றியூரில் சோகம்
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.