தூத்துக்குடியில் வாலிபர் மீது தாக்குதல்


தூத்துக்குடியில் வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 28 April 2021 2:36 PM GMT (Updated: 28 April 2021 2:36 PM GMT)

தூத்துக்குடியில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஸ்பிக்நகர்:
முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவலிங்கத்துரை மகன் பாரத் (வயது 23). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளத்தில் தும்பு கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் முத்தையாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு  அவர் காரில் வந்துள்ளார். பின்னர் முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவில் வைத்திருக்கும் தண்ணீர் பந்தலில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சதீஷூம், செல்வகணேஷூம் பாரத்திடம்,  ஏன் காரை வேகமாக ஓட்டி வந்தாய் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் செல்வகணேஷ் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்.

Next Story