வாய்புண் சிகிச்சைக்கு பின்பு சரத்பவார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரான சரத்பவாருக்கு இந்த மாத தொடக்கத்தில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு வாய்புண்ணால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வாய்புண் அகற்ற சிகிச்சைக்காக அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை முடிந்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து மந்திரியும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறுகையில், “எங்கள் கட்சி தலைவர் சரத்பவார் இன்று(நேற்று) ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். டாக்டர்களின் அறிவுறுத்தல்படி அவர் வீட்டில் ஓய்வெடுப்பார்” என்றார்.
Related Tags :
Next Story