மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + Rs 28 lakh gold seized at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பெரம்பலூரைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அதேபோல் சென்னையைச் சேர்ந்த நூர்முகமது உஸ்மான் (22) என்பவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடரில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை சிறு சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கலந்து கடத்தி வந்தரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடரில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை சிறு சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கலந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. துபாயில் இருந்து சென்னைக்கு குளிர்பான பவுடரில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை சிறு சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கலந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது; 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 451 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.