பித்தளை பொருட்கள் திருட்டு


பித்தளை பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 30 Sep 2021 7:04 PM GMT (Updated: 30 Sep 2021 7:04 PM GMT)

காரைக்குடி பகுதியில் கடையில் இருந்த பித்தளை பொருட்கள் திருடு போனது.

காரைக்குடி,

காரைக்குடி டி.டி நகரைச் சேர்ந்தவர் மேரி. இவர் காரைக்குடி முதல் போலீஸ் பீட் அருகே பித்தளை பாத்திரங்களை பாலீஸ் செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் பூட்டியிருந்த கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story