தனியார் நிறுவனத்துக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


தனியார் நிறுவனத்துக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2021 10:28 AM GMT (Updated: 1 Oct 2021 10:28 AM GMT)

தனியார் நிறுவனத்துக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த தனியார் நிறுவனத்திற்கு திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் வெள்ளகுளம் சாலை பகுதியை சேர்ந்த காளிதாசன் (வயது 36), தண்ணீர்குளம் சாய்சக்தி நகரை சேர்ந்த பால்ராஜ் (31) ஆகியோர் கையில் கத்தியுடன் உள்ளே நுழைந்து அங்கு பணியில் இருந்த பணியாளர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் மணிவேலு (53) திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக காளிதாசன், பால்ராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story