பள்ளி மாணவியிடம் 32 பவுன் நகை பறித்தவருக்கு வலைவீச்சு


பள்ளி மாணவியிடம் 32 பவுன் நகை பறித்தவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Oct 2021 8:59 AM GMT (Updated: 2 Oct 2021 8:59 AM GMT)

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பள்ளி மாணவியிடம் 32 பவுன் நகை பறித்தவரை போலீசார் தேடி வருகி்ன்றனர்.

இன்ஸ்டாகிராமில் அறிமுகம்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 40). விவசாயி. இவரது 16 வயது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.இந்தநிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது இன்ஸ்டாகிராமில் ரேவன்த் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் இவரிடம் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

நகை-பணம் பறிப்பு

கடந்த 6 மாதமாக இவ்வாறு பேசி வந்த அந்த வாலிபர் பின்னர் பள்ளி மாணவியை மிரட்டி 32 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சம் போன்றவற்றை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து விவசாயி கோபிநாத் நேற்று முன்தினம் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான செல்போன் எண்ணை கொண்டு அந்த வாலிபர் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story