சென்னை விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


சென்னை விமான நிலைய வளாகத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Oct 2021 4:44 AM GMT (Updated: 3 Oct 2021 4:44 AM GMT)

சென்னையை அடுத்த மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் தமிழ்நாடு ஜெனரல் யூனியன், சென்னை விமான நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்க செயலாளர் வீரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

துப்புரவு பிரிவில் வேலை மறுக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு மற்றும் டிராலி தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு கலந்து கொண்டார். முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி உருவ படத்துக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story