சட்டப்பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி


சட்டப்பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 3 Oct 2021 8:52 AM GMT (Updated: 3 Oct 2021 8:52 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை மதுராந்தகம் சார்பு கோர்ட்டு நீதிபதி சரிதா, மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி பிரியா, குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி 2. சங்கீதா ஆகியோர் தலைமை தாங்கினர். மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் ஆஸ்பத்திரி் சாலையில் இருந்து பஸ் நிலையம் வரை பேரணி நடந்தது. பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு வக்கீல்கள், போலீஸ் துறை, கோர்ட்டு ஊழியர்கள், வட்ட சட்டப்பணிகள் குழு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் மதுராந்தகம் வக்கீல்கள் சங்கத் தலைவர் அய்யனாரப்பன், வக்கீல்கள் சம்பத்குமார், புகழேந்தி, வட்ட சட்டப்பணிகள் ஊழியர்கள் பத்மபிரியா, கோமதி, பரிமளா, தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story