ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 Oct 2021 10:18 PM IST (Updated: 3 Oct 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் நடந்த 222 சிறப்பு முகாம்களில் 33 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தேனி: 

தமிழகம் முழுவதும் 4-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தன. அதன்படி தேனி மாவட்டத்தில் 222 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடந்தன. முகாம் நடந்த இடங்களில் மக்கள் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 307 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 28 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 15 ஆயிரத்து 279 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 155 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 90 ஆயிரத்து 330 பேரும், 2 தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 20 ஆயிரத்து 825 பேரும் செலுத்திக் கொண்டனர்.


Next Story