73-வது குடியரசு தின விழா: மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்


73-வது குடியரசு தின விழா: மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2022 12:29 AM GMT (Updated: 27 Jan 2022 12:29 AM GMT)

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை,

நம் நாட்டின் 73-வது குடியரசு தின விழா, மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கம் ஆயகர்பவன் வளாகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ஸ்ரீமதி கீதா ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விமான நிலையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் முதன்மை தலைமை கமிஷனர் அலுவலகத்தில், தலைமை கமிஷனர் எம்.வி.எஸ். சவுத்ரி, சென்னை அண்ணாநகரில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை கமிஷனர் அலுவலக வளாகத்தில், முதன்மை கமிஷனர் எஸ்.ரவிச்செல்வன், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் அதன் தலைவர் சுனில் பாலிவால், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பொதுமேலாளர் (நிதி) எம்.குணசேகரன், சென்னை விமான நிலைய முனையத்தில் இயக்குனர் சரத்குமார், இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகத்தில் தென்மண்டல நிர்வாக இயக்குனர் ஆர்.மாதவன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.

மீனம்பாக்கம் சுங்க இலாகா அலுவலகத்தில நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசிய கொடியை இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் ஏற்றி வைத்து ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் எம். இளங்கோவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதில், மாநகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணையம்

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சென்னையில் உள்ள அவரது வீட்டின் மொட்டை மாடியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அலுவலக வளாகத்தில், தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எ.சுந்தரவல்லி, முதன்மை தேர்தல் அதிகாரி (ஊராட்சிகள்) சுப்பிரமணியம், (நகராட்சிகள்) கு.தனலட்சுமி, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி கோ.ஜெய்குமார், சட்ட ஆலோசகர் க.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரிப்பன் மாளிகை

சென்னை எழிலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், வணிக வரித்துறை கமிஷனர் க.பணிந்தர ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நில நிர்வாக கமிஷனர் எஸ்.நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்டக் கமிஷனர் ந.வெங்கடாசலம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர் ஜெயகாந்தன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ராஜாராம், வருவாய் நிர்வாகத்துறை இணை கமிஷனர் ஆர்.சீத்தாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன், டாக்டர் எஸ்.மனிஷ், டி.சினேகா, சிம்ரன் ஜீத் சிங் காஹ்லோன், எம்.சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மின்சார வாரியம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தில், மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்த ராவ், சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில், வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில், ஆவின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன், சென்னை பல்லவன் இல்லத்தில், மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

வங்கிகள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் எஸ்.எல்.ஜெயின், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குனர் பர்தா பிரதிம் செங்குப்தா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வட்டார சேவைகள் செயல் இயக்குனர் கே.சைலேந்திரா மூவர்ண கொடியை ஏற்றினார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தேசிய கொடியை ஏற்றினார். வாரிய உறுப்பினர்கள் அப்துல் சமது எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ., சையத் ரேஹான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story