வீட்டுமனை வாங்கி தருவதாக போலீஸ் உதவி கமிஷனரிடம் ரூ.20 லட்சம் மோசடி


வீட்டுமனை வாங்கி தருவதாக போலீஸ் உதவி கமிஷனரிடம் ரூ.20 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 28 Jan 2022 12:02 PM GMT (Updated: 28 Jan 2022 12:02 PM GMT)

வீட்டுமனை வாங்கி தருவதாக போலீஸ் உதவி கமிஷனரிடம் ரூ.20 லட்சம் மோசடி வழக்கில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை கிண்டி போலீஸ் உதவி கமிஷனராக பணிபுரிந்து 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சங்கரலிங்கம். இவரிடம் வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்த ஜோதி (வயது 50) என்பவர் பள்ளிக்கரணையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் வாங்கினார்.ஆனால் சொன்னபடி வீட்டுமனை வாங்கி தராமல் ஏமாற்றியதுடன், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

இது குறித்து கிண்டி போலீசில் சங்கரலிங்கம் புகார் செய்தார். இது தொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜோதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story