பெண்ணிடம் ரூ.11¾ லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.11¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 28 Jan 2022 8:26 PM GMT (Updated: 28 Jan 2022 8:26 PM GMT)

வட்டியில்லா கடன் வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி நடைபெற்று உள்ளது.

மதுரை, 

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த ஞானசெல்வி, பாலகுமார், பிரியதர்ஷினி, ரமேஷ், சந்திரன் ஆகியோர் வங்கியில் வட்டியில்லா கடன் வாங்கித்தருவதாக கூறினார்கள். இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 70 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி வங்கியில் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை மோசடி செய்த அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஞானசெல்வி உள்பட   5 பேர் மீது மதுரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story