நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 621 பேருக்கு கொரோனா தென்காசியில் முதியவர் சாவு


நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 621 பேருக்கு கொரோனா தென்காசியில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 30 Jan 2022 9:18 PM GMT (Updated: 30 Jan 2022 9:18 PM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 621 பேருக்கு கொரோனா தென்காசியில் முதியவர் இறந்தார்

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 759-ஆக உயர்ந்துள்ளது. 56 ஆயிரத்து 309 பேர் குணமடைந்து உள்ளனர். 4 ஆயிரத்து 7 பேர்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்திலும் நேற்று ஒரே நாளில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 61-ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 148 பேர் குணமடைந்து உள்ளனர். 2 ஆயிரத்து 424 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 78 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதனால் தென்காசி மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 489-ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 63 ஆயிரத்து 890-ஆக அதிகரித்து உள்ளது. 60 ஆயிரத்து 995 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story
  • chat