தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி சோதனை


தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 31 Jan 2022 10:30 AM GMT (Updated: 31 Jan 2022 10:30 AM GMT)

சென்னையை அடு்த்த தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின்படி தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிரடி நடவடிக்கையில்(ஸ்டாமிங் ஆபரேசன்) ஈடுபட்டனர்.

அதன்படி 6 உதவி கமிஷனர்கள் தலைமையில் 10 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீசார், 10 ஊர்க்காவல் படையினர் 2 குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதியில் வாகன சோதனை செய்தும், பழைய குற்றவாளிகள் மற்றும் கோர்ட்டில் பிடிவாரண்டு பிறக்கப்பட்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் விதமாக திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தினர்.

அதன்படி நடந்த வாகன சோதனையில் மொத்தம் 300 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அதில் குடிபோதையில் வந்த 10 பேர் மீதும், இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் அமர்ந்து வந்ததாக 5 பேர் மீதும், 20 பழைய குற்றவாளிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு, அங்கு முக கவசம் அணியாமல் வந்த 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story