சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு; ஒரே நாளில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூல்


சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு; ஒரே நாளில் ரூ.5½ லட்சம் அபராதம் வசூல்
x

சென்னையில் முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு போட்டு, ரூ.5½ லட்சம் அபராத தொகை வசூலித்துள்ளனர்.


சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதையடுத்து போலீசார், முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு போட்டு அபராத தொகை வசூலித்து வருகிறார்கள். சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, முக கவசம் அணியாத 1,668 பேர் மீது வழக்கு போட்டு, ரூ.5½ லட்சம் அபராத தொகை வசூலித்துள்ளனர்

Next Story
  • chat