காஷ்மீரில் 45 வங்கிகளில் பண பரிமாற்றம் நிறுத்தம் கொள்ளையர்கள் அட்டூழியம் எதிரொலி


காஷ்மீரில் 45 வங்கிகளில் பண பரிமாற்றம் நிறுத்தம் கொள்ளையர்கள் அட்டூழியம் எதிரொலி
x
தினத்தந்தி 6 May 2017 10:45 PM GMT (Updated: 6 May 2017 7:39 PM GMT)

காஷ்மீர் மாநிலத்தில் சோபியன், புல்வாமா ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் கொள்ளையர்கள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் சோபியன், புல்வாமா ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் கொள்ளையர்கள் புகுந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 போலீசாரையும், 2 ஊழியர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அங்கு மேலும் பல வங்கிகள் மீது கொள்ளையர்கள் குறிவைக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்கி அதிகாரிகள், அந்த 2 மாவட்டங்களில் சுமார் 45 வங்கிகளில் பண பரிமாற்றத்தை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து அங்கு பண பரிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘குறிப்பிட்ட வங்கி கிளைகளின் பண பரிமாற்றம், அருகில் உள்ள பிற வங்கி கிளைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். அதே நேரத்தில் ஏ.டி.எம். சேவை, பிற வங்கியியல் சேவைகள் தொடரும். இந்த 2 மாவட்டங்களிலும் உள்ள வங்கிகளில் மேலும் கொள்ளை சம்பவங்கள் நடக்கலாம் என தகவல்கள் வந்ததின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

‘‘அதே நேரத்தில் இது தற்காலிக ஏற்பாடுதான். அந்த வங்கி கிளைகளில் அனைத்து தரப்பு பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி விட்டு மீண்டும் பண பரிமாற்றத்துக்கு அனுமதி வழங்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story