வாள் சண்டையில் சிறுவன் காயம் 2 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு சிறுவன் மரணம்


வாள் சண்டையில் சிறுவன் காயம் 2 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு சிறுவன் மரணம்
x
தினத்தந்தி 9 Jan 2018 10:25 AM GMT (Updated: 9 Jan 2018 10:25 AM GMT)

வாள் சண்டையில் சிறுவன் காயம் 2 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாம் நடந்து உள்ளது. #latesttamilnews

ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷாகித் பேட் பகுதியில் ஒரு நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் மணமகன் குடும்பம் சார்பில்   வாள் சண்டை பயிற்சி  நடைபெற்றது. இதில்  16 வயதான 10 வகுப்பு மாணவன் செய்யது ஹமீத் மற்றும் 20 வயதான முகமது ஜுனைத் என்ற வாலிபரும் வாள் சண்டை  நடத்தினர். 

இதில்  எதிர்பாராத விதமாகக சிறுவன் ஹமீத் மீது வாள் பாய்ந்தது. உடனடியாக அவரது குடும்பத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.  அடுத்து வேறு ஒரு மறுத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கும் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.
 
3 வது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஹமீது உயிரிழந்து உள்ளார்.

இது குறித்து ஹமீத்  குடும்பத்தினர் கூறும் போது 2-3 செண்டிமீட்டர் ஆழத்தில், காயம் இருந்தது.  மேலும் ரத்தம் அதிகம் வெளியாகி இருந்தது.

சண்டை நடந்து கொண்டு இருந்த போது எனது மகனை தக்க முயன்றார்.  ஆனால் சுற்றி  இருந்தவர்கள் சண்டையை நிறுத்துமாறு கூறினார்கள். ஆனால் நிறுத்தவில்லை சற்று நேரத்தில் எனது இளைய மகன்  காயம் அடைந்தார்.  கொல்லப்பட்டார்   என ஹமீதின் தாயார் கூறி உள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜுனைத் கைது செய்யபட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் முற்றிலும் தற்செயலானது என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story