தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னரிடம் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் விசாரித்தார்


தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னரிடம் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் விசாரித்தார்
x
தினத்தந்தி 2 Jun 2018 11:30 PM GMT (Updated: 2 Jun 2018 10:13 PM GMT)

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு, போலீஸ் தடியடியில் தூத்துக்குடியில் 13 பேர் பலியாகினர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இந்த சம்பவம்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் தமிழக சட்டம்–ஒழுங்கு குறித்து விசாரித்ததாகவும், அதற்கு கவர்னர், தனது டெல்லி பயணத்தின்போது நேரில் சந்திப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இந்த தகவலை உள்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story