வராக்கடன் மற்றும் மோசடிகள்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வங்கி அதிகாரிகள் விளக்கம்


வராக்கடன் மற்றும் மோசடிகள்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வங்கி அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 3 Jun 2018 10:45 PM GMT (Updated: 3 Jun 2018 8:28 PM GMT)

வராக்கடன் மற்றும் மோசடிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வங்கி அதிகாரிகள் இன்று விளக்கம் அளிக்கின்றனர்.

புதுடெல்லி,

வங்கிகளில் அதிகரித்து வரும் வராக்கடன் மற்றும் கடன் மோசடிகளால் வங்கித்துறைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி அரசு வங்கிகளில் ரூ.7.77 லட்சம் கோடி அளவுக்கு வராக்கடன்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில் பொதுத்துறை வங்கிகளை கையாளுவதில் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்துகிறது.வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த குழுவினர் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகளை அழைத்து இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்துகின்றனர். இதில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி உயர் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர்.

இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், இன்றைய விசாரணையில் கலந்து கொள்வார் என தெரிகிறது. இந்த விசாரணை குறித்து இம்மாத இறுதியில் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் விளக்கம் அளிக்கின்றனர்.

Next Story