பாகிஸ்தான் எல்லையில் படையை குறைக்கமாட்டோம், உஷார் நிலையில் உள்ளோம் - எல்லைப் பாதுகாப்பு படை


பாகிஸ்தான் எல்லையில் படையை குறைக்கமாட்டோம், உஷார் நிலையில் உள்ளோம் - எல்லைப் பாதுகாப்பு படை
x
தினத்தந்தி 6 Jun 2018 4:00 PM GMT (Updated: 6 Jun 2018 4:00 PM GMT)

பாகிஸ்தான் எல்லையில் இந்திய பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது என்று எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. #BSF


புதுடெல்லி,

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் எல்லையில் துப்பாக்கி சூட்டை நிறுத்தும் வண்ணம் இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்படது. ஆனால் பாகிஸ்தான் அடாவடியை தொடர்கிறது. எல்லையில் பதட்டத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், எல்லைப் பாதுகாப்பு படை, எல்லையில் படை பலத்தை குறைக்ககூடாது என முடிவு செய்து உள்ளது, தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று எல்லைப் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி கூறிஉள்ளார். 

ஜூன் 3-ம் தேதி பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், பொதுமக்கள் 16 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து எல்லை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 30,000 பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ராம் அவ்தார் பேசுகையில், “எல்லையில் படைகள் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது, இருநாட்டு கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் நாங்கள் எல்லையில் படையை குறைக்கவில்லை. நாங்கள் உஷார் நிலையில் உள்ளோம்,” என்று கூறிஉள்ளார். எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் எதுவும் நடத்தவில்லை, பொதுமக்கள் மீண்டும் விவசாய பணிகளுக்கு செல்ல நம்பிக்கை பெற்று உள்ளனர் என அவர் குறிப்பிட்டு உள்ளார். பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லைப் பகுதியில் பறக்கும் கருவி இயக்கப்படுகிறது என்பது தொடர்பான செய்திக்கு பதிலளிக்கையில், இதுபோன்ற விஷயம் நடக்கதான் செய்கிறது, இதனால் கவலை கொள்ளதேவையில்லை என குறிப்பிட்டு உள்ளார். 


Next Story