சம்பூர்ண கிராந்தி விரைவு ரெயில் காசியாபாத் நகரில் தடம் புரண்டது


சம்பூர்ண கிராந்தி விரைவு ரெயில் காசியாபாத் நகரில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 9 Jun 2018 4:11 PM GMT (Updated: 9 Jun 2018 4:11 PM GMT)

பீகாரின் பாட்னா நகரை நோக்கி சென்ற சம்பூர்ண கிராந்தி விரைவு ரெயில் காசியாபாத் நகரில் இன்று தடம் புரண்டது.

புதுடெல்லி,

பீகாரின் பாட்னா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த சம்பூர்ண கிராந்தி விரைவு ரெயில் காசியாபாத் நகரின் கோட்காவன் பகுதி அருகே வந்தபொழுது இன்று மாலை 6.40 மணியளவில் தடம் புரண்டது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனால் மொரதாபாத் நோக்கி செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து ரெயிலை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன என வடக்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story