தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழைக்கு 16 பேர் பலி; சட்டசபையில் மந்திரி தகவல் + "||" + 16 dead in rain-related incidents in Kerala: Minister

கேரளாவில் கனமழைக்கு 16 பேர் பலி; சட்டசபையில் மந்திரி தகவல்

கேரளாவில் கனமழைக்கு 16 பேர் பலி; சட்டசபையில் மந்திரி தகவல்
கேரளாவில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் கடந்த 2 நாட்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள சட்டசபையில் இன்று பேசிய வருவாய் துறை மந்திரி சந்திரசேகரன், கடந்த மே 29ந்தேதி பருவமழை தொடங்கியது.  இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் மழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர் என கூறியுள்ளார்.

இந்த மழையால் 1,109 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.  61 வீடுகள் முழுவதும் இடிந்து போயுள்ளன.  33 குடும்பங்களை சேர்ந்த 122 பேர் நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என முதற்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

188.41 ஹெக்டேர் விவசாய நிலங்களில் ஏற்பட்ட வேளாண் சேதமதிப்பு ரூ.6.34 கோடி என தெரிய வந்துள்ளது.  இந்த கனமழையால் ஏற்பட்ட பேரிடரில் 2,784 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கனமழைக்கு பலியானோரின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும்.  வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் 11,84,390 வாக்காளர்கள் வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மலர்விழி வெளியிட்டார். இதன்படி 11,84,390 வாக்காளர்கள் உள்ளனர்.
2. நாடு முழுவதும் பெய்த கனமழை, வெள்ளம்: 993 பேர் உயிரிழப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
நாடு முழுவதும் இந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக 993 போ் உயாிழந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
3. கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பி வைத்தார்
கன மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை லாரிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பி வைத்தார்.
4. வால்பாறையில் கனமழை: தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் விரிசல்
வால்பாறையில் தொடரும் கனமழை காரணமாக தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் ஊற்று ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
5. கனமழை: அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன.