டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம்


டெல்லியில் இன்று  அதிகாலை இலேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 3 July 2018 2:56 AM GMT (Updated: 3 July 2018 2:56 AM GMT)

டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. #EarthQuake

புதுடெல்லி

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானதாக  நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. 


Next Story