ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி கட்சிக்குள் பிளவு, புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு?


ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முப்தி கட்சிக்குள் பிளவு, புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்பு?
x
தினத்தந்தி 3 July 2018 5:02 AM GMT (Updated: 3 July 2018 5:02 AM GMT)

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #MehboobaMufti

ஜம்மு, 

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அண்மையில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் மூன்று எம்.எல்.ஏக்கள், பாஜக- மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி முறிவுக்கு மெகபூபா முப்தியே காரணம் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனால், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளை தவிர்த்து, தனியாக ஒரு கூட்டணி அமைத்து, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க  முயற்சிக்க கூடும் என்றும் செய்திகள் கூறுகின்றன. மெகபூபா முப்திக்கு எதிராக, அதிருப்தி தெரிவிக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், மக்கள் ஜனநாயக கட்சிக்குள் பிளவு ஏற்படும் என உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 


Next Story