ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை
x
தினத்தந்தி 10 July 2018 2:30 AM GMT (Updated: 10 July 2018 2:30 AM GMT)

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. #JammuEncounter

ஜம்மு,

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தின் குண்டாலன் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த என்கவுண்டரில் 34 ஆர் ஆர் பிரிவைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

நீண்ட நேரம் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனிடையே என்கவுண்டர் குறித்து விரிவான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

Next Story