தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதல் இடம், 15-வது இடத்தில் தமிழகம்


தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதல் இடம், 15-வது இடத்தில் தமிழகம்
x
தினத்தந்தி 10 July 2018 2:00 PM GMT (Updated: 10 July 2018 2:00 PM GMT)

தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திராவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. மாநில அரசுகள்  தொழில் சீர்திருத்தங்களை மேற்கொண்டதை அடிப்படையாக கொண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில்,  ஆந்திரா முதல் இடம் பெற்றுள்ளது. தெலுங்கானா 2-ஆம் இடத்தில் உள்ளது. 

ஹரியானா, ஜார்கண்ட், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே, 3,4,5 ஆகிய இடங்களில் உள்ளன. முதல் 10 இடங்களுக்குள் சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகம் இந்த பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி, 23-வது இடத்தில் உள்ளது. 

Next Story