உன்னோவ் பலாத்கார வழக்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரை குற்றவாளியாக சிபிஐ இணைத்தது


உன்னோவ் பலாத்கார வழக்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரை குற்றவாளியாக சிபிஐ இணைத்தது
x
தினத்தந்தி 11 July 2018 1:59 PM GMT (Updated: 11 July 2018 1:59 PM GMT)

உன்னோவ் பலாத்கார வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரை குற்றவாளியாக சிபிஐ இணைத்துள்ளது. #UnnaoCase #KuldeepSengar

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் பெயர் அடிப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி போராட்டம் நடத்திய நிலையில் இவ்விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்தது. இதற்கிடையே சிறுமியின் தந்தை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை போலீஸ் கைது செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை குற்றவாளியாக சிபிஐ இணைத்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சிறுமியின் தந்தையை அடித்துக் கொன்றதில் எம்.எல்.ஏ.வின் சகோதரர் மற்றும் 4 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளது. ஏப்ரல் மாதம் 12-ம் தேதி இவ்வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய சிபிஐ, 19 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது, 76 பேரை சாட்சியாகவும், 53 ஆவண ஆதாரங்களையும் இணைத்துள்ளது.


Next Story