வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலி


வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 11 July 2018 9:29 PM GMT (Updated: 11 July 2018 9:44 PM GMT)

உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பரேலி,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை விரட்டி சென்று கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெறிநாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.

உத்தரபிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாத காலத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் வெறிநாய் கடித்து உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story