தேசிய செய்திகள்

டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் + "||" + Kidney Transplantation operation at 3 men in Delhi hospital

டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன்

டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன்
டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் நடைபெற்றது. ஒவ்வொருவரின் மனைவி சிறுநீரகமும் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அவர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் அவர்களுக்கு சிறுநீரகங்கள் தானம் பெறமுடியவில்லை.

அதேசமயம் அதிசயமாக, முகமது உமர் யூசுப்பின் மனைவி சனா காதுனின் (26) சிறுநீரகம் அஜய் சுக்லாவுக்கும், அஜய் சுக்லாவின் மனைவி மாயா சுக்லாவின் (37) சிறுநீரகம் கமலேஷ் மண்டலுக்கும், கமலேஷ் மண்டலின் மனைவி லட்சுமி சாயாவின் (40) சிறுநீரகம் முகமது உமர் யூசுப்புக்கும் பொருந்துவது தெரிய வந்தது. இதுபற்றி டாக்டர்கள் அந்த பெண்கள் மூவரிடமும் கூறிய போது, அவர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுநீரகம் தானம் பெறும் 3 ஆண்கள், சிறுநீரகம் தானம் கொடுக்கும் 3 பெண்கள் ஆகிய 6 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரே‌ஷன் நடந்தது. சனா காதுனின் சிறுநீரகம் ஆபரே‌ஷன் மூலம் மாயா சுக்லாவின் கணவர் அஜய் சுக்லாவுக்கு பொருத்தப்பட்டது. இதேபோல் மாயா சுக்லாவின் சிறுநீரகம் லட்சுமி சாயாவின் கணவல் கமலேஷ் மண்டலுக்கும், லட்சுமி சாயாவின் சிறுநீரகம் சனா காதுனின் கணவர் முகமது உமர் யூசுப்புக்கும் பொருத்தப்பட்டது. 14 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரே‌ஷன் வெற்றிகரமாக அமைந்தது.

3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத இன்று 3 தம்பதியினரும் சிறுநீரக தானத்தின் மூலம் நண்பர்களாகி விட்டனர். இந்த மூன்று சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன்களும் அபூர்வ நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.



தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
2. டெல்லி: ‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த பா.ஜனதா தலைவர்
டெல்லியில் பா.ஜனதா தலைவர் ‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
3. தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - டெல்லியில் நடந்தது
டெல்லியில் தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தொழில் நிறுவனங்களுக்கான விளக்க கருத்தரங்கு நடைபெற்றது.
4. டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொலை
டெல்லியில் மர்ம நபர்களால் தலைமைக்காவலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. டெல்லியில் திருட முயற்சி செய்ததாக 16 வயது சிறுவன் அடித்துக் கொலை
டெல்லியில் திருட முயற்சி செய்ததாக 16 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றதுள்ளது.