டுவிட்டரில் 3 லட்சம் பாலோவர்களை இழந்த பிரதமர் மோடி


டுவிட்டரில் 3 லட்சம் பாலோவர்களை இழந்த பிரதமர் மோடி
x
தினத்தந்தி 14 July 2018 7:34 AM GMT (Updated: 14 July 2018 7:34 AM GMT)

டுவிட்டரில் பிரதமர் மோடி 3 லட்சம் பாலோவர்களையும், ராகுல்காந்தி 17 ஆயிரம் பாலோவர்களையும் இழந்து உள்ளனர். #PMModi #RahulGandhi

புதுடெல்லி

டுவிட்டர் போலியான கணக்குகளை அகற்றி வருகிறது. இதனால் பிரதமர்நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 3 லட்சம் பாலோவர்களை  இழந்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி 17,000 பாலோவர்களை இழந்து உள்ளார்.

மோடி பாலோவர்கள் எண்ணிக்கை 4.34 கோடியில் இருந்து   4.31  கோடியா குறைந்து உள்ளது. தினசரி அடிப்படையில் டுவிட்டர் பாலோவர்களின்  எண்ணிக்கையை கண்காணிக்கும் சோசியல் பிளேடு இணையதளம்  (SocialBlade.com) கூறியுள்ள தகவலின் படி  மோடி தனிப்பட்ட டுவிட்டர் (@narendramodi) கணக்கின்  பாலோவர்கள் எண்ணிக்கை 2,84,746 குறைந்தது.  (@PMOIndia) பிரதமர் அலுவலக கணக்கில்  (@PMOIndia)   140,635 பாலோவர்கள் குறைந்து உள்ளனர்.

இது போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  (@RahulGandhi)  கணக்கில் 17 , 503 பாலோவர்களும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் 1,51,509 பாலோவர்களும் குறைந்து உள்ளனர். ஆனால் டுவிட்டர் தனது அதிகார பூர்வ  தகவலை அளிக்க வில்லை.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளால் முடக்கப்பட்டிருக்கும் - பூட்டப்பட்ட கணக்குகளை அகற்றுவதாக இந்த வாரம் அறிவித்த டுவிட்டர் அறிவித்தது.  உலகளாவிய சுயவிவரங்கள் முழுவதும் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையில் உள்ளது. இந்த நடவடிக்கை உயர்ந்த பயனர்களை மிகவும் பாதிக்கும்.

வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் (@SushmaSwaraj) 74,132 பாலோவர்களை  இழந்துள்ளார். பாரதிய ஜனதா  தேசிய தலைவர் அமித் ஷா 33,363  பாலோவர்களையும, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 91,555 பாலோவர்களையும் இழந்து உள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 21,878  பாலோவர்களையும் இழந்து உள்ளனர்.


Next Story