மனைவியின் வாய், மூக்கு மற்றும் கண்களில் பசையை வைத்து அடைத்து கொடூர கொலை செய்த குடிகார கணவன்


மனைவியின் வாய், மூக்கு மற்றும் கண்களில் பசையை வைத்து அடைத்து கொடூர கொலை செய்த குடிகார கணவன்
x
தினத்தந்தி 4 Aug 2018 9:53 AM GMT (Updated: 4 Aug 2018 9:53 AM GMT)

மனைவியின் வாய், மூக்கு மற்றும் கண்களில் உடைந்த பொருட்களை ஒட்டும் பசையை வைத்து அடைத்து கொடூர கொலை செய்த குடிகார கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

விதிஷா,

மத்திய பிரதேசத்தின் விதிஷா பகுதியில் ராஜ்புத் காலனியை சேர்ந்தவர் ஹல்கேராம் குஷ்வாஹா.  இவரது மனைவி துர்கா பாய் (வயது 35).  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தனது 2 மகன்களையும் வெளியே செல்லும்படி கூறி விட்டு மனைவியின் வாய், மூக்கு மற்றும் கண்கள் ஆகியவற்றில் உடைந்த பொருட்களை ஒட்டுவதற்காக பயன்படும் பசையை கொண்டு அடைத்து உள்ளார்.

இதனால் துர்காவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.  அதன்பின்னர் அவரது கணவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இதனை அறியாது வெளியே சென்றவர்களில் ஒரு மகன் திரும்பி உள்ளார்.  அவர் தரையில் அசைவின்றி துர்கா கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.  இதனை அடுத்து ஹல்கேராம் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குடிகாரரான கணவர் துர்காவுடன் எப்பொழுதும் சண்டையிட்டு வந்து உள்ளார்.  கடந்த காலங்களிலும் துர்காவுக்கு விஷம் வைத்து கொல்ல அவர் முயற்சித்து உள்ளார் என போலீசாரிடம் அவர்களின் மகன் தெரிவித்து உள்ளார்.


Next Story