மத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு


மத்திய மந்திரி கூறியதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி மத்திய அரசு மீது தாக்கு
x
தினத்தந்தி 6 Aug 2018 6:52 AM GMT (Updated: 6 Aug 2018 6:52 AM GMT)

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேலை வாய்ப்புகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசை தாக்கி உள்ளார்.

புதுடெல்லி

சாலை மற்றும்  போக்குவரத்துத் துறை மத்திய மந்திரி நிதின் கட்காரி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம், ஆனால்  வேலைகள் இல்லை. வங்கிகள் ஐடி  நிறுவனங்களில் வேலைகள் குறைந்து விட்டன.  அரசாங்க ஆட்சேர்ப்பு முடங்கி  உள்ளது.  வேலைகள் எங்கே? என குறிப்பிட்டார்.

மேலும் கட்காரி இடஒதுக்கீடு முறை குறித்து பேசும்போது, "இட ஒதுக்கீடு பிரச்சனை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு அரசியல் ஆர்வமாக வந்துள்ளது. ஒவ்வொருவரும் தாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என கூறுகிறார்கள்.  பீகார் மற்றும் உத்தரப் பிரதேசங்களில் பிராமணர்கள் வலுவாக உள்ளனர். அவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் பின்தங்கியவர்கள் என்று அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்  "என்று பாஜக மூத்த தலைவர் கட்காரி  கூறினார்.

வேலைகள் குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு உத்தரவாதமளிக்க முடியாது என -கட்காரி கூறியதை மேற்கோள்காட்டிய  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி... 

மிகச் சிறந்த கேள்வி கட்காரி ஜி! எங்கே வேலை வாய்ப்புகள்  என ஒவ்வொரு இந்தியனும் இதே  கேள்வியைக் கேட்கிறான்?  என ராகுல்காந்தி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story